ஸ்மார்ட்போனில் உங்களுக்கு தெரியாத சென்சார் வசதிகளும், அவற்றின் பயன்களும்!
ஸ்மார்ட்போனில் பேசிக் மாடல் முதல் உயர்ரக மாடல் வரையில், பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளடக்கியுள்ளன. இங்கு ஸ்மார்ட்போனில் உள்ள அடிப்படை சென்சார்கள் மற்றும் அவற்றின் பயன்களை காணலாம்.
ஸ்மார்ட்போனில் பேசிக் மாடல் முதல் உயர்ரக மாடல் வரையில், பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளடக்கியுள்ளன. அவற்றில் பலருக்கு தங்கள் மொபைலில் இவ்வளவு வசதிகள் உள்ளதா என்பதே தெரியாது. இங்கு ஸ்மார்ட்போனில் உள்ள அடிப்படை சென்சார்கள் மற்றும் அவற்றின் பயன்களை காணலாம்.
TAMIL NEWS HEADLINES
களமிறங்கும் அதிமுக, திமுக வாரிசு வேட்பாளர்கள்; எந்த தொகுதியில் யார் போட்டி - முழு விவரம்!Mar 18, 2019, 07:42 AM IST
திமுக vs அதிமுக: மக்களைவத் தேர்தலில் நேருக்கு நேர்! யாருடன் யார் மோதப் போகிறார்?Mar 17, 2019, 10:56 PM IST
Samayam Poll : உங்கள் வாக்கு யாருக்கு?Mar 15, 2019, 12:11 PM IST
திமுக இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்: ஸ்டாலின் அறிவிப்புMar 17, 2019, 07:20 PM IST
18 தொகுதிகளில் நிற்கவுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியல்Mar 17, 2019, 11:11 PM IST
திமுக மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!Mar 17, 2019, 07:15 PM IST
1. ACCELEROMETER
அசிலரோமீட்டர் சென்சார் என்பது ஸ்மார்ட்போனின் அசைவை உணர பயன்படும். உதாரணத்துக்கு போட்டோக்களை பார்க்கும் போது, மொபைலை சாய்த்தால் போட்டோவும், தானாக மாறும். ஆட்டோமெட்டிக் ரொட்டேசன் ஆப்ஷன் இந்த சென்சார் மூலம் தான் இயங்குகிறது.
2. PROXIMITY போன் பேசும் போது ஸமார்ட்போனில் உள்ள ஸ்கீரின் டச் அணைந்து விடும். அதற்கு ப்ராக்சிமெட்டி சென்சார் பயன்படுகிறது. ஸ்மார்ட்போனின் செல்பி கேமரா அருகில் இந்த சென்சார் இருக்கும்.
3. GYROSCOPE கைரோஸ்கோப் சென்சாரும் கிட்டதட்ட அசிலரோமீட்டர் சென்சார் மாதிரி தான். ஆனால், ACCELEROMETER என்பது நேராகவும், கிடைமட்டமாகவும் மட்டுமே செயல்படும். கைரோஸ்கோப் 360 டிகிரியும் செயல்படும். முப்பரிமாண வீடியோ, 360 டிகிரி வீடியோ, கேம் போன்றவை இந்த சென்சார் இருந்தால் தான் பார்க்க முடியும்
4. BAROMETER பாரோமீட்டர் என்பது உங்களை சுற்றியுள்ள காற்றுமண்டல வெப்பநிலை, காற்றழுத்தம் போன்றவை அறிய பயன்படுகிறது. மொபைல் லொகேஷனை ஆன் செய்தால் போதும், உங்கள் இருப்பிடத்தில் உள்ள வானிலை மாற்றம் அறிந்து கொள்ளலாம்.
6. AMBIENT LIGHTஆட்டோமெட்டிக் பிரைட்னைஸ் வேண்டுமென்றால் அம்பியன்ட் லைட் சென்சார் இருக்க வேண்டும். அம்பியன்ட் சென்சார் மொபைலின் சுற்றப்புற வெளிச்சத்தை உணருகிறது. அதற்கு ஏற்றவாறு மொபைல் டிஸ்ப்ளே பிரைட்னஸ் மாறுகிறது.
7. MAGNETOMETER
மேக்னட்டோமீட்டர் என்பது திசைகாட்டும் கருவி பயன்படுத்த உதவுகிறது. கூகுள் மேம்பில் நீங்கள் எந்த இருக்கிறீர்கள் என்பதையும், எந்த திசையை நோக்கி செல்ல வேண்டும் என்பதையும் அம்புகுறியீட்டு காட்டுகிறது. இந்த சென்சார் இல்லை என்றால் உங்கள் கூகுள் மேப்பில் வெறும் வட்டமாக தான் உங்கள் இருப்பிடத்தைக் காட்டும். அம்புக்குறி காட்டாது.
மேற்கண்ட சென்சார் தவிர மற்ற இதயதுடிப்பு அறியும் சென்சார், இரத்த அழுத்த சென்சார் உள்ளிட்டவைகளும் உண்டு. இது போன்றவை உயர்ரக ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இருக்கும். உங்கள் ஸ்மாரட்போனில் என்னென்ன சென்சார்கள் உள்ளது என்பதை கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் sensor test என்ற ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
*RH NEWS MEDIA*
No comments:
Post a Comment