Monday 29 April 2019

கற்றுக் கொள்வோம்

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது.

ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம்.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும். தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.

ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை. வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும்.

மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது. குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி செய்கிறது.

வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வோம்.
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்

கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

*🆎 நேரலை செய்திகள்*

*✍🆎கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் சஸ்பெண்ட்*

*✍🆎நாளை பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் இன்று சஸ்பெண்ட்*

*✍🆎சேலத்தில் பணியாற்றியபோது அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு செய்ததற்காக சஸ்பெண்ட்*

Friday 19 April 2019

வரலாற்று நிகழ்வு

*எல்லோரும் நல்லவரே*
&&&&&&&&&&&&&&&&&&&&&

தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.

இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்.

விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ஸ்ரீஇராமரால் அனுப்பப்பட்டார்.

அவரும் நந்திகிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு, பரதனிடம், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார்.

பரதனும், “ஸ்ரீஇராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ.” எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார்.

“ஸ்ரீஇராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்.” எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, “உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார் அனுமன்.

துணுக்குற்ற பரதன், “அவள் மஹாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?” எனக் கேட்டான்.

அப்போது அனுமன் பின்வருமாறு பிறர் அறியாத கைகேயியின் பெருமைகளைக் கூறினார்.

“பரதா! நீயோ இந்த உலகமோ அவளை அறிந்து கொண்ட லக்ஷணம் இவ்வளவுதான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா?

தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் திந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான்.

ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, “தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்.” எனச் சாபமிட்டாள்.

பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷிகுமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், “உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்” என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார்.

தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

தசரதர் இராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து,  தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின் பின்விளைவுகளை, பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

அந்த முகூர்த்தப்படி இராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்யபாரத்தில் இராமன் அன்று அமர்ந்திருந்தால் அதுவே அவனது ஆயுளை முடிந்திருக்கும்.

புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது இராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ஸ்ரீஇராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை.

அந்தக் கணத்தில் அரணாக இருப்பவன் உயிர் நீப்பது இராஜ்யத்தின் ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள்.

அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாள்கள் வனவாசம். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம்கூட இராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகிவிட்டது.

எந்தப் பெண் தன் சௌமங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? இராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் அத்தகைய வரத்தைக் கேட்டாள்.

ஒருகால் நீ ஏற்றால் ஸ்ரீஇராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மஹா தியாகி.

அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ஸ்ரீஇராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக இராவணன் வரை பல ராக்ஷஸர்களின் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்கவேண்டும்” என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.

இராமாயணத்தில் தன்னலம் அற்ற இன்னொரு மங்கையும் திரை மறைவில் உண்டு. அவளையும் பார்ப்போம்.

ஸ்ரீஇராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பி விட்டனர். அவர்களுக்குச் சேவை செய்ய லக்ஷ்மணரும் கிளம்பிவிட்டார். கிளம்பியவர் தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக்கொள்ள அவளது அந்தப்புரத்துக்குச் சென்றார்.

தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியுமாதலால், இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால், தன் நினைவும் விரகதாபமும் அவரை சரிவர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள்.

ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லக்ஷ்மணனை வரவேற்கத் தயாரானாள். லக்ஷ்மணன் வந்து கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன், “தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்லவே? நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும்? அண்ணிதான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர்பின் போகிறாள். நானாக இருந்தால் அதுகூட போகமாட்டேன்.

வாருங்கள் என்னுடன்; நாம் மிதிலைக்குப் போய் சௌக்கியமாக வாழலாம்.” என்றாள்.

லக்ஷ்மணன் கோபத்துடன், “நீ இவ்வளவு மோசமானவளா? நீ வரவேண்டாம்; என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு; என் அண்ணனுடனும், அண்ணியுடனும், நான் போகிறேன்.” என்றான்.

“உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன்.” என்றாள் சிரித்துக்கொண்டே ஊர்மிளை. “அப்படியே ஆகட்டும்.” எனக் கூறிச்சென்ற லக்ஷ்மணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காது இராமனுக்குச் சேவை செய்ய முடிந்தது.

ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லக்ஷ்மணனை வாட்டவில்லை. இராம பட்டாபிஷேகம் முடிந்தபிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லக்ஷ்மணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை எப்போதையும் விட அதிகமாக நேசித்தான்.

இந்த உலகில் எதையும் ஆராயாது நம்பக் கூடாது என்பதை இந்த நிகழ்ச்சி விளக்குகிறது.

ஆசிரியர்கள்- இறைத்தூதர்கள்

தேர்தல் திருவிழா
மூன்று நாட்கள் பயிற்சி
வசிப்பிடத்திற்கும்
பணியிடத்திற்கும்
சம்பந்தமேயில்லா
தொலைவிடத்தில்...
எவ்வித பயிற்சியும்
வழங்காமலேயே...
அடிப்படை வசதிகள்
ஏதுமில்லா
தேர்தல் மையங்கள்..
உறவு துறந்து
ஊண் உறக்கம் துறந்து
ஊர் பறவையாய்....
நீரில்லாமல்
உணவில்லாமல்
காற்றை மட்டுமே சுவாசித்து வாழுமாம் சாதகப் பறவை...
தேர்தல் பணியாற்றும்
ஒவ்வோர் ஆசிரியரும்
சாதகப் பறவையே...
வான் பார்த்து
குளித்ததுண்டா நீங்கள்??
நாங்கள் குளிப்போம்
நட்சத்திரங்களுடன்
உரையாடிக் கொண்டே...
குருவி குயில் ஆந்தை
கண்டோம்
பாம்பைதான் காணவில்லை
அதற்கும்
முதலுதவிப் பயிற்சி
பெற்றே இருக்கிறோம்..
11 மணி நேரம்
அமர்ந்த இடத்திலிருந்து
அசையாமல் இருந்ததுண்டா...
இயற்கை உபாதைகளுக்கும்
இடம் பெயராமல்..
கின்னசில்தான்
இடம்பெறவில்லை..
அனைத்து வகை
மக்களையும் கையாளும் மந்திரவாதி
நாங்கள்
கற்றவர் கல்லாதவர்
பணக்காரர் பாமரர்
முட்டாள் மூர்க்கர்
முக்கியமாய்
'குடிமகன்', களையும்
சேர்த்தே...
இவ்வனைத்தும்
கடந்து கடமையாற்றும்
எங்கள் முகத்தில்
சினமோ வெறுப்போ
காழ்ப்புணர்வோ
சிறிதேனும்
கண்டதுண்டா...
'செவாலியே விருது',
எங்களுக்கே உரியது...
100 முறை ஒரே எண்ணையும்
ஊரையும் எழுதியதுண்டா...
பள்ளிப் பருவத்தை
கடக்கவில்லை இன்னமும் நாங்கள்
எழுதிக் கொண்டே....
அனைவரிடமும்
அன்பு பாராட்டி
அனைத்தும் முடித்து
அதிகாரியை
ஆர்வமாய் எதிர்நோக்கி இன்னிசை இரவில்..
முட்டாள் மாணவராய்
எமை எண்ணி
முந்நூறு முத்தான
கேள்விகளால்
கணை தொடுக்கும்
கனவானையும் சமாளித்து
சமர்ப்பித்த பின்னே
சமநிலைக்கு வருவோம்...
இனிதான் இருக்கிறது
இனிமையே...
இதுவரை கடமையாளராக
காட்சியளித்த நாங்கள்
இரவில் இன்னலின்றி இல்லம் திரும்புவது
எவ்விதம்...
இதைப் பற்றிய எவ்விதக் கவலையும்
கொள்ளா நிர்வாகத்தால்
'அனாதைகளாய்',
தெருவில் நாங்கள்...
அன்றும் இன்றும்
என்றும்
எங்களுக்குத் துணை
எங்கள் சக ஆசிரியர்களே
அவர்கள் ஆணோ, பெண்ணோ...
சரி இத்தனையும்
கடந்த எங்களுக்கான
உழைப்பூதியம்
அறிவீரா??..
வாக்குச்சாவடி அலுவலர் 1700/_
பிற அலுவலர் 1300/_
இதைத் தூக்க இயலாமல்
தூக்கிக் கொண்டு
இல்லம் திரும்பினோம்
இரு நாட்களுக்குப் பிறகு நடு நிசியில்....
இவ்வளவுக்குப் பிறகும்
இனி தேர்தல் பணி
தவிர்ப்போம் என்றா
எண்ணுகிறீர்கள்????
இல்லவே இல்லை
இனிமையாய்
பணியாற்றுவோம்
இனியும்.....
ஏனெனில் ஏனெனில்
அரசுக்கும் சமுதாயத்திற்குமான
இறைதூதர்கள்
நாங்களே.....
ஆசிரியப் பணி
அறப் பணி...
பெருமையும் கர்வமும்
கொள்கிறோம்
அரசுப் பள்ளி
ஆசிரியராய்...🙋🙋🙋🙋🙋🙋👍👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊

Wednesday 17 April 2019

தேர்தல் பணி

*தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.....*

1. நம்மிடம் பேச்சு கொடுத்துத் தேவையில்லாத பிரச்சனைகளை வாக்கெடுப்பின்போது நமக்கு எதிராகத் தூண்டிவிட்டு வாக்குச்சாவடியைக் கைப்பற்றலாம் ..
ஆகவே அமைதி காத்துத் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியில் கவனம் செலுத்துக.

2.நாம் பணிபுரியும் இடத்தில் நமக்கு அறிமுகமில்லாதவர்களிடம் கட்சி சார்ந்த விடயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

3.வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் ஒருமித்த ஒற்றுமை உணர்வுடன் பணியை மேற்கொள்ள வேண்டும்.

4.நம் மனநிலை இதுதான் என்று மற்ற கட்சிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே வாக்குச் சாவடி முகவர்களிடம் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டாதீர்கள்

5.கூடுமானவரை ஆறு வேளைக்குமான  உணவினைத் தயார் செய்துகொண்டு எடுத்துச் செல்லுங்கள் .யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்.ஆசிரிய நண்பர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு உண்க .

7.நமக்கே தெரியாமல் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு எப்போதும் குழுவாக இயங்குக .தனித்து எங்கும் செல்ல வேண்டாம்.

8.வாக்குச் சாவடியில் உள்ள நம் ஆசிரியர்களைத் தவிர்த்து யாருடனும் வீணான பேச்சுவார்த்தைகளை வைத்துக்கொள்ள வேண்டாம்.

9.மக்கள் யாருக்காக அதிகம் வாக்களித்துள்ளார்கள் என்று எவரேனும் கேட்டால் எங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியாது என்ற விடை கூறுங்கள்.

10.பார்வையற்றவர்கள் ஊனமுற்றவர்கள் வயதானவர்கள் எனவரும் வாக்காளர்களை உதவி செய்கிறேன் என்ற பாங்கில் கவனத்துடன் நடந்து கொள்க.

11.அறிமுகம் இல்லாதவர்களிடம் உணவைப் பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் 

12.தேர்தல் பணிக்குச் சொந்த வாகனத்தில் செல்பவர்கள் தங்கள் வாகனத்தை மிகவும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைக்கவும் 

13.வாக்குச்சாவடி முகவர்களை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாளுங்கள். அவர்களிடம் நம்மைப்பற்றி ஒரு சார்பு கட்சிகள் தவறான எண்ணத்தைப் பதிவிட்டு இருக்கிறது.

14.எதிர்பாராமல் வருகின்ற பிரச்சனைகளை ஒருமித்த உணர்வுடன் எதிர்கொள்ளுங்கள்.

15.பிற கட்சிகள் நம்மைத் தவறாக புரிந்து கொண்டு நம்மை அவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப இயக்கவும் திட்டமிட்டிருப்பார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

13.தேர்தல் பணியில் நம்முடைய செயல்பாடுகளும் நடைமுறைகளும் நடுநிலைமையுடன் உள்ளதாகவே இருக்குமாறு பார்த்துக் கொள்க.

14.தேர்தல் அலுவலர்கள் PO வைத்தவிர செல் போன் அறவே தவிருங்கள். பல பிரச்சனைகளுக்கும் நம் கவனம் சிதற வாய்ப்பாய் அமைந்துவிடும்.

15.யாரும் அச்சமூட்டுவதாக எண்ண வேண்டாம். நம் உயிருக்கும் உடைமைக்கும் நாமே பொறுப்பு ....

தேர்தல் பணி

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

*குழுவில் உள்ள உறுப்பினர்கள்  தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்.*

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
👇👇👇👇👇👇👇👇👇👇👇

                  *PRO duty*

*1-Pro dairy*
*2-form17c.*
*3- 16 points abserver report  sheet.*
*4- visiter sheet.*
*5- pledge commencement of poll and after close the poll.*
*6- Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்*  

                       *Po1 duty* .

*1- elector identify is very important.*
*2.Marked copy of elecoral roll .ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்* *3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்*             

            *Po2 duty-*

*1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்*
*3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்*
*4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.*      

                  *Po 3 duty-*

*வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.*

      *General instructions* .  

    *49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும்   refused the Vote என்று எழுத வேண்டும்.              *49-m என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before  enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.*

*49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும்* *இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்*

*1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்*
*2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்*
*3.Test votes*
*4.proxy votes*
*மேற்கண்ட நிகழ்வுகள் Maximum* *நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் Election rules தெரிந்து  வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.*

       *குறிப்பு*

*தேர்தல் முடிந்தவுடன் Control unit off செய்யவேண்டும். Vvpatல் Batteryஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்*

*எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்*

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

Saturday 13 April 2019

ராகுல் காந்தி பிரச்சாரம்

🔵⚪ *சேலம் பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு:*

*இந்தியாவில் பல்வேறு மொழிகள், இனங்கள், சித்தாந்தங்கள் உள்ளதாக திமுக -  காங்கிரஸ் கூறுகிறது.*

*தமிழகத்தை ஆர்.எஸ்.எஸ் ஆள வேண்டும் என பாஜக விரும்புகிறது. மோடியின் பிரதமர் அலுவலகம் தமிழகத்தை ஆள நினைக்கிறது.*

*கலைஞர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர். கலைஞரின் நினைவிடம் அமைப்பதில் அநீதி இழைக்கப்பட்டதாக ஸ்டாலின் கூறினார். இது கலைஞருக்கு இழைக்கப்பட்ட அவமானம் கிடையாது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்ட அவமானம்.*

*தமிழர்களையும், தமிழ் மக்களையும் மதிக்க தெரிந்தவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.*

*காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கண்ணாடி அறைக்குள் அமர்ந்து தயாரிக்கப்பட்டது இல்ல அது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க கூடிய அறிக்கை.*

*நீட் தேர்வில் மாணவி அனிதா இறந்தது போல, வேறு எந்த மாணவியும் இறக்க கூடாது என்பதில் காங் தெளிவாக உள்ளது.*

*காங் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா?  இல்லையா ? என்பதை மாநில அரசின் விருப்பத்திற்கு விட்டுவிடுவோம்.*

*ஒரே இரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி நடவடிக்கை மூலம் திருப்பூர் தொழில் துறையையும்,  காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியையும் அழித்து விட்டார் மோடி.*

*பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன் இது தேவையா என யாரிடமாவது கலந்து பேசினாரா மோடி?.*

*நாங்கள் கருத்துப் பரிமாற்றத்தின் மூலமே தீர்வுகளை எட்ட முடியும் என நம்புகிறோம்.*

*கோடிக்கணக்கான பணத்தை அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. 15 கோடீஸ்வரர்களுக்காக ஆட்சியை நடத்துகிறார் மோடி.*

*டெல்லியில் ஆடையின்றி போராடிய விவசாயிகளை அழைத்து பேசாத மோடி, அனில் அம்பானிக்கும், விஜய் மல்லையா, நீரவ்மோடிக்கும் அன்பை வழங்கி அமர்ந்து பேசுகிறார் மோடி.*

*காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, குறைந்தபட்ச வரி, எளிய வழி என்ற முறையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்.*

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...