Monday 25 March 2019

TTV தினகரனின் சின்னம் எது ?

அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. குக்கர் சின்னம் என்பது பொதுவானது, அதை டிடிவி தினகரனுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது. அமமுக பதிவு செய்யப்பட கட்சி கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


இதனால் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்ன முடிவு எடுக்க போகிறார், நாளை அவரது கட்சியின் வேட்பாளர்கள் எப்படி போட்டியிட போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.



முக்கியம்


தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளைதான் கடைசி நாள். ஆனால் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தால் இன்னும் அமமுகவில் இருந்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்னும் ஒரு வேட்பாளர் கூட அமமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


விசாரணை


இந்த நிலையில் நாளை வழக்கு விசாரணையில் கண்டிப்பாக குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டிடிவி தினகரன் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். 99.9 சதவிகிதம் குக்கர் சின்னம் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கொண்டு இருக்கிறார். வழக்கு விசாரணையில் நாளை முக்கிய திருப்பம் வரும் என்று அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.


நாளைத்தான்


நாளைதான் அமமுக வேட்பாளர்கள் எல்லோரும் வேட்புமனுதாக்கல் செய்ய இருக்கிறார்கள். இந்த வழக்கில் நாளை உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின் இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். இல்லையென்றால் இவர்கள் எல்லோரும் தனியாக சுயேட்சையாக தேர்தலில் நிற்க முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.


என்ன புதிர்


ஆம், ஒருவேளை குக்கர் சின்னம் கிடைக்காத பட்சத்தில், அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அதற்கு என்று தனியாக பொது சின்னம் வழங்கப்படாது. இதனால் வேட்பாளர்கள் எல்லோரும் சுயேட்சையாக தேர்தலில் நின்று போட்டியிடுவார்கள். இவர்களுக்கு தனியாக சின்னம் வழங்கப்படும். நாளை மதியத்திற்குள் இந்த புதிருக்கான விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...