பல்லடம் அருகே பிடிபட்ட பணம் குறித்த அதிர்ச்சி தகவல் : காலை 9.50 மணிக்கு தேர்தல் பறக்கும் படை பல்லடத்தை அடுத்த கரடிவாவியில் வாகன சோதனை மேற்கொண்ட போது TN72 BB 9834 எண்ணுடைய டெம்ப்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்த போது 4 தகரப்பெட்டிகள் இருந்தது. அதில் TMB வங்கி முத்திரை இருந்தது. இதனை அடுத்து வேனில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில் போத்தனூரில் இருந்து தூத்துகுடிக்கு ரூபாய் 10 கோடி ரொக்கப்பணம் கொண்டு செல்வதாகவ்தெரிவித்தனர். ஆவணங்களை சரிபார்த்தபோது முன்னுக்குபின் முரணாக இருந்ததால் காலை 10.30 மணிக்கு பல்லடம் தாலுக்கா அலுவலகம் கொண்டுசெல்லப்பட்டு வேன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 7 மணி நேரம் ஆகியும் இது வரை எந்த ஒரு தகவலும் இன்றி பிடிபட்ட பணம் குறித்த விசாரணை நீடி...........க்க்கிறது.
No comments:
Post a Comment