புகாட்டி அறிமுகப்படுத்திய உலகின் காஸ்ட்லி கார் - விலை ரூ.88 கோடிதான்! #LaVoitureNoire
ராகுல் சிவகுரு
Published Date: 6 MARCH 2019 5:40PM
Last Updated Date: 6 MARCH 2019 5:40PM
Sponsored
2019 ஜெனிவா மோட்டார் ஷோவில், உலகின் காஸ்ட்லி காரான ‘La Voiture Noire’ (88 கோடி ரூபாய்) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த கார் டிசைனரான ஜீன் புகாட்டி வடிவமைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க Type 57 SC Atlantic காரை நினைவுகூறும் விதமாகவே, புகாட்டி நிறுவனம் இதைச் செய்திருக்கிறது. கடந்த சில வாரங்களில், கார்பன் ஃபைபர் கட்டுமானம் கொண்ட ‘La Voiture Noire’ காரின் டீசர்கள் மற்றும் Type 57 SC Atlantic காரின் பெருமையை எடுத்துச் சொல்லும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது தெரிந்ததே.
Sponsored
மொத்தம் 4 கார்கள் மட்டுமே Type 57 SC Atlantic - All Black Variant உற்பத்தி செய்யப்பட்டது என்றால், ‘La Voiture Noire’ ஒரு கார் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் கார் என்பதைப் பறைசாற்றும் விதமாக, காரின் முன்பக்க டிசைன் ஸ்போர்ட்டியாக உள்ளது. புகாட்டியின் வெய்ரான் மற்றும் Chiron ஆகிய கார்களைவிட, இதன் க்ரில் பெரிதாக இருப்பதுடன், வீல் ஆர்ச்சுக்கு மேலே ஹெட்லைட்ஸ் இருக்கின்றன. Type 57 SC Atlantic உடன் ஒப்பிடும்போது, ‘La Voiture Noire’ காரில் நீளமான பானெட் மற்றும் கூபே டிசைன் மிஸ்ஸிங். ஆனால், அட்லான்ட்டிக் காரின் பிரத்யேக டிசைன் அம்சமான Dorsal Seam, புதிய காரின் பானெட் - ரூஃப் - கதவுக் கண்ணாடி ஆகியவற்றில் இடம்பெற்றிருப்பது நைஸ். இதுவும் All Black ஃப்னிஷில் வருகிறது.
Sponsored
மெக்லாரன் P1 காரைப் போலவே, ‘La Voiture Noire’ காரின் பின்பக்கம் அமைந்திருக்கிறது. அதாவது, பெரிய க்ரில் போன்ற டெயில்கேட்டில், மெல்லியதாக டெயில் லைட் (Continuous LED) பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், வெள்ளை நிற புகாட்டி என டெயில்கேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. 6 எக்ஸாஸ்ட் பைப்புகள், 1500bhp பவரை வெளிப்படுத்தும் 8.0 லிட்டர், 16 சிலிண்டர் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளன. Chiron காரில் இருக்கும் அதே இன்ஜின்தான்!. €11 மில்லியன் விலையைக் கொண்டிருக்கும் புகாட்டி ‘La Voiture Noire’, இந்திய மதிப்பில் 88 கோடி ரூபாய் ஆகும். உலகின் காஸ்ட்லி காராக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இதை, ஏற்கெனவே ஒருவர் வாங்கிவிட்டார்!. அவரைப் பற்றிய தகவல்களை புகாட்டி வெளியிடவில்லை.
No comments:
Post a Comment