மலைக்க வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய வளர்ந்து வரும் நடிகர் இவர்தான்... சாதாரண கார் அல்ல...
Written by: Arun Muthu | Sat, March 16, 2019, 12:00 [IST]
வளர்ந்து வரும் நடிகர் ஒருவர், மலைக்க வைக்கும் விலையில், சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்திய மார்க்கெட்டில் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) திகழ்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் லக்ஸரி எஸ்யூவி வகை கார் இது. இந்தியாவில் புகழ்பெற்ற மனிதர்கள் பலரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி இருக்கிறது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இதற்கு ஓர் உதாரணம்.

புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரை, மேரி கோம் சமீபத்தில்தான் வாங்கினார். இதுதவிர பாலிவுட் பிரபலங்கள் பலரும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரை சொந்தமாக வைத்துள்ளனர். சல்மான் கான், விவேக் ஓபராய், ரன்வீர் சிங், ஷாகித் கபூர், ஷெர்லின் சோப்ரா என இந்த பட்டியல் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்லும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் 85.67 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன்ரோடு விலை கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயை தொட்டு விடும். 350டி மற்றும் 400 என 2 வேரியண்ட்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி கார் கிடைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. 350டி வேரியண்ட்டில், 3.0 லிட்டர் டர்போர்சார்ஜ்டு வி6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 225 பிஎச்பி பவர் மற்றும் 620 என்எம் டார்க் திறனை உருவாக்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை பெற்றது.

அதே சமயம் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 329 பிஎச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின் வெர்ஷன்களிலும், 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. அத்துடன் 4மேட்டிக் சிஸ்டமும் (4MATIC System) இடம்பெற்றுள்ளது.

4 வீல் டிரைவ் சிஸ்டம்தான் (4WD System), 4மேட்டிக் சிஸ்டம் என குறிப்பிடப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது 4 வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு, 4மேட்டிக் சிஸ்டம் என பெயர் சூட்டியுள்ளது. இந்திய மார்க்கெட்டில், ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) உள்ளிட்ட கார்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி போட்டியிட்டு வருகிறது.

இந்த சூழலில் பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா சமீபத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ரன்தீப் ஹூடா, பிர்லியண்ட் ப்ளூ ஷேடில், காரை வாங்கியுள்ளார். அத்துடன் ரன்தீப் ஹூடா வாங்கியிருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரின், கிராண்ட் எடிசன் ஆகும்.

இதில் கூடுதலான வசதிகள் சில இடம்பெற்றிருக்கும். ஆனால் ரன்தீப் ஹூடா வாங்கியிருப்பது என்ன வேரியண்ட்? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரை வாங்கியிருக்கும் தகவலை, ரன்தீப் ஹூடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் என்ற பிராண்டு மீது ரன்தீப் ஹூடா அதிக பிரியம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
MOST READ: உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

20 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி இன்டலிஜென்ட் லைட் சிஸ்டம் என மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் இன்டீரியரில் மிகவும் சௌகரியமான நப்பா லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment