புதிய ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படடு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
உலக அளவில் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று சிவிக். இந்தியாவிலும் ஹோண்டா சிவிக் கார் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாத நிலையில், 8ம் தலைமுறை சிவிக் கார் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 7 ஆண்டுகள் கழித்து 10ம் தலைமுறை ஹோண்டா சிவிக் கார் மீண்டும் இந்தியாவில் இன்று விற்பனைக்கு களமிறக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா சிவிக் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய மாடலாக வந்துள்ளது. அத்துடன், டீசல் மாடலிலும் வந்திருக்கிறது.
புதிய ஹோண்டா சிவிக் காரின் பெட்ரோல் மாடல் வி, விஎக்ஸ், இசட்எக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடலானது விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.
புதிய ஹோண்டா சிவிக் காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.8 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 139 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
MOST READ:மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...
முதல்முறையாக ஹோண்டா சிவிக் காரில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும்,, 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 26.8 கிமீ மைலேஜையும் வழங்கும். இதன் ரக மாடல்களில் இதன் டீசல் எஞ்சின் மிக சிறப்பான மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயம். புதிய ஹோண்டா சிவிக் காரில் 47 லிட்டர் கொள்திறன் எரிபொருள் கலன் பொருத்தப்பட்டு இருக்கிறது.
புதிய ஹோண்டா சிவிக் கார் 4,656 மிமீ நீளமும், 1,799 மிமீ அகலமும், 1,433 மிமீ உயரமும் கொண்டது. இந்த பிரிமீயம் ரக செடான் கார் 2,700 மிமீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. இதனால், உட்புறத்தில் சிறப்பான இடவசதியை அளிக்கும். பழைய சிவிக் காரைவிட 20 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கூடுதலாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹோண்டா சிவிக் காரில் பொருட்கள் மற்றும் உடைமைகளை வைத்து எடுத்துச் செல்வதற்கான 430 லிட்டர் கொள்ளளவு பூட்ரூம் இடவசதி உள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு இது போதுமானதாக இருக்கும் என்று கருதலாம்.
எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில்லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரின் பேஸ் வேரியண்ட்டுகளில் 16 அங்குல அலாய் வீல்களும், டாப் வேரியண்ட்டில் 17 அங்குல அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 215/50 R17 அளவுடைய டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் மற்றும் புளூடூத் ஆகிய வசதிகளையும் பெற்றிருக்கிறது.
இந்த காரின் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் மூலமாக கட்டுப்படுத்த முடியும். மேலும், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய 160 வாட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.
புதிய ஹோண்டா சிவிக் காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பார்க்கிங் கேமரா ஆகியவையும் உள்ளன. இடதுபுற ரியர் வியூ மிரர் மற்றும் ரியர் வியூ கேமராக்களின் காணொளியை இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தின் திரை மூலமாக பார்க்க முடியும்.
புதிய ஹோண்டா சிவிக் கார் பிளாட்டினம் ஒயிட் பியர்ல், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் கோல்டன் பிரவுன் மெட்டாலிக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.
புதிய ஹோண்டா சிவிக் கார் ரூ.17.69 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டாப் வேரியண்ட் ரூ.22.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா ஆகிய கார்களுடன் போட்டி போடும்.
Variant
Petrol CVT
Diesel MT
V
Rs 17,69,900
N/A
VX
Rs 19,19,900
Rs 20,49,900
ZX
Rs 20,99,900
Rs 22,29,900
No comments:
Post a Comment