Thursday, 7 March 2019

விமானத்துக்குள் பயணிகளுக்கு மூச்சுத் திணறல்




விமானத்துக்குள் பயணிகளுக்கு மூச்சுத் திணறல்



டெல்லியில் இருந்து பிராங்பர்ட் சென்ற ஏர் இந்தியா விமானம், உள் காற்றழுத்த குறைபாடு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து பிராங்பர்ட் சென்ற ஏர் இந்தியா விமானம், உள் காற்றழுத்த குறைபாடு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. 


ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து மதியம் 1.35 மணி அளவில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு புறப்பட்டது. 191 பயணிகள் பயணம் செய்த நிலையில், விமானத்தின் உள்ளே உள்ள காற்றழுத்தம் திடீரென குறைந்தது. இதனால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது விமானம் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மேலே 20,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. 

இதையடுத்து விமானத்தை உடனடியாக டெல்லிக்கே திருப்பி வந்து தரையிறக்கினார். பயணிகள் அத்தனை பேரும் பத்திரமாக தரையிரக்கப்பட்ட நிலையில், காற்றழுத்த குறைபாடு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


No comments:

Post a Comment

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...