*☦🅾பிளஸ்-1 மாணவியை கொல்ல முயன்ற சம்பவத்தில் கைதான பெற்றோர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்*
தர்மபுரி:
அனைவரையும் உலுக்கிய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு .பாலக்கோடு அருகே கட்டாய திருமணத்தை மறுத்த பிளஸ்-1 மாணவியை கொல்ல முயன்ற வழக்கில் கைதான பெற்றோர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது42). இவர் மினி வேன் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர்.
இவர்களது மூத்த மகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.இப்படியிருக்க குமார் தனது மினி வேனை இயக்கி வரும் டிரைவரும், தனது மகளும் காதலிப்பதாக சந்தேகம் அடைந்தார். இதனால் தினமும் குடித்து விட்டு வந்து தனது மகளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.தான் யாரையும் காதலிக்கவில்லை என்று மகள் எடுத்துக்கூறியும் அதனை குமார் நம்பவில்லை. மேலும் உறவினர் ஒருவரை கட்டாய திருமணம் செய்து கொள்ள மகளிடம் குமார் வற்புறுத்தி உள்ளார். அதற்கு மகள் நான் படிக்க வேண்டும் என்று சொல்லி திருமணத்திற்கு மறுத்து விட்டார். இதனால் குமாரும், தனலட்சுமியும் சேர்ந்து இரும்பு கம்பியால் கை மற்றும் முதுகு பகுதியில் சூடு வைத்து மகளை கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே சிறை வைத்துள்ளனர்.
நேற்று காலை பள்ளிக்கு செல்லுமாறு மகளிடம் தாய் தனலட்சுமி கூறி மதிய உணவை டிபன் பாக்சில் வைத்து கொடுத்துள்ளார். இதை வாங்கிக் கொண்டு மகள் பள்ளிக்கு செல்ல புறப்பட்டார். அப்போது அவருடைய தங்கை வந்து, நீ கொண்டு போகும் மதிய உணவில் அம்மா குருணை விஷம் கலந்து இருப்பதாக சொல்லியிருக்கிறாள் . உடனே அதை திறந்து பார்த்தபோது விஷ மருந்து வாடை ஏற்பட்டு உள்ளது.
இதனால் சுதாரித்துக் கொண்ட மகள் உணவை சாப்பிடாமல் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். உணவில் விஷம் கலந்து தன்னை கொல்ல முயற்சி செய்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார் .இந்த புகாரின் அடிப்படையில் மகேந்திர மங்கலம் போலீசார் 307 (கொலை முயற்சி) மற்றும் 511 ஆகிய பிரிவுகளில் மாணவியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பெற்றோரை தேடி அவர்கள் ஊருக்கு சென்றனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து தலைமறைவானது தெரியவந்தது.
பின்னர் விசாரித்தபோது, 2 பேரும் வெளியூர் செல்ல திட்டமிட்டு ஜிட்டாண்ட அள்ளி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு விரைந்து சென்ற போலீசார் குமார், தனலட்சுமி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது கட்டாய திருமணம் செய்ய மறுத்ததால் அவர்கள் உணவில் விஷம் கலந்து மகளை கொல்ல முயன்றது தெரியவந்தது. கைதான 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்..!
No comments:
Post a Comment