டெல்லியில் குடிநீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஹார்ஷ்விஹாரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 5ஆம் வகுப்பு மானவி ஒருவர் உணவு இடைவேளையின்போது 4ஆம் வகுப்பு மாணவியுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது 5ஆம் வகுப்பு மாணவி, 4ஆம் வகுப்பு மாணவியின் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். கொடுமை என்னவென்றால் அந்த 4ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் பாட்டிலை எடுத்து வந்துள்ளார். தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த 5ஆம் வகுப்பு மாணவி அலறித்துடித்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
No comments:
Post a Comment