அதுவும் தினமும் நாம் சாப்பிட கூடிய பாதி உணவுகள் மிக மோசமான பாதிப்பை ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தருகிறதாம். காலை முதல் இரவு தூங்கும் முன் வரை நாம் சாப்பிடும் உணவு பழக்கம் நமது மூளையை பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும்.
பலருக்கு மன அழுத்தம், மன நிம்மதியற்று போகுதல், உயர் இரத்த அழுத்தம் போன்ற பலவித பாதிப்புகள் உண்டாகும். இனி எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
உப்பு
பலருக்கு உப்பு அதிகம் சேர்த்த உணவுகள் என்றால் கொள்ளை பிரியம். ஆனால், இது போன்ற உணவுகளில் அதிக சோடியம் சேர்த்திருப்பதால் நமது மூளையின் இயக்கத்தை தான் முதலில் பாதிக்கும். இவற்றால் உங்களது நிம்மதி கெட்டு, தலைவலி, மன அழுத்தம் ஆகிய பாதிப்புகள் உண்டாகுமாம்.
கேன் சூப்ஸ்
கடைகளில் கேனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சூப்களை மிகவும் விரும்பி சாப்பிடுவோம். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது போன்ற உணவுகளில் அதிக அளவில் bisphenol-A என்கிற வேதி பொருள் சேர்க்கப்பட்டிருக்கும்.
இவை நேரடியாக உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.
வேர்க்கடலை
நாம் சாதாரணமாக சாப்பிடும் வேர்கடலைக்கும், அதிக உப்பு சேர்க்கப்பட்டு பாக்கெட்டுகளில் விற்கும் வேர்கடலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இது போன்ற வேர்கடலைகளில் அதிக அளவில் உப்பு போன்ற அஜினோமோட்டோ-வை அதிக அளவில் சேர்த்திருப்பதால் இவை நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
பிஸ்கட்ஸ்
சுவைமிக்க இந்த பிஸ்கட்ஸ்களை யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சர்க்கரைகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் முதலியவை மன அழுத்தம், மோசமான மன நிலையை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆதலால், இதை தவிர்ப்பது சிறந்தது.
சிப்ஸ்
சிப்ஸ் வகை என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் பிடிக்கும். ஆனால், சிப்ஸ்களை சாப்பிட தொடங்கினால் மேலும் மேலும் சாப்பிட தூண்டும். ஆகையால் இவை உடல் பருமன், பசியின்மை, கொலஸ்ட்ராலை அதிகரித்தல் முதலிய தாக்கத்தை உண்டாக்க கூடும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பொதுவாக பதப்படுத்தப்ட்ட உணவுகளில் எக்கசக்க நச்சு கலந்த பொருட்கள் சேர்ந்திருக்கும். இவற்றை சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் சுலபமாக பாதிக்கப்படும். எனவே, இது போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிக சர்க்கரை
கடைகளில் விற்கப்படும் பாட்டில் ஜுஸ்களில் பலவித அபாயகர வேதிகள் சேர்த்துள்ளனர். இவற்றை நாம் தெரிந்த குடித்தால் மரண வாசலுக்கான டிக்கெட் மிக சுலபமாக கிடைத்து விடும் என்பதே உண்மை. எனவே, கட்டாயம் இந்த வகை உணவுகளை சாப்பிட கூடாது.
மது
மூளையை நேரடியாக பாதிக்கும் பழக்கத்தில் முதல் இடத்தில் இருப்பது மது அருந்துவதால் ஏற்படும் கேடுகளை அடுக்கி வைத்தாலும் இதை உணர்ந்த பாடில்லை. இந்த பழக்கத்தால் மன அழுத்தம் அதிகரித்து, எரிச்சல், கோபம் போன்றவை தான் உண்டாகும் என ஆய்வுகளும் சொல்கின்றன.
No comments:
Post a Comment